பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலைப் போர் நடவடிக்கையாகக் கருதுகிறோம் என பாகிஸ்தான் பிரதமர்
ஷெபாஸ் ஷெரீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
எதிரிகள் பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எனவே இந்த போர் நடவடிக்கைக்குப் பலமான பதிலடி கொடுக்கப்போம்.
பாகிஸ்தான் ஆயுதப்படைக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இந்தியாவிற்கு எப்படி பதிலடி தருவது என்று எங்களுக்குத் தெரியும் .
பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். எதிரிகள் அவர்களின் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை
அவர்களின் நோக்கங்கள் வெல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்பால் இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகாரபூர்வமாகப் போர் தொடங்கிவிட்டது என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்கள் மீது,
‘ஒபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட குறித்த ஏவுகணைத் தாக்குதலில் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் சுமார் 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply