14 நாடுகளுக்கு சவுதி அரேபியாவின் விசா தடை

Spread the love

சவுதி அரேபியா 14 நாடுகளுக்கு விசா தடையை விதித்துள்ளது.

ஹஜ் பருவத்தை முன்னிட்டு 14 நாடுகளுக்கு  இந்த  தற்காலிக விசா தடை  விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையானது, ஜூன் மாத நடுப்பகுதியில்  முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் உம்ரா விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் ஏப்ரல் 13 வரை சவுதி அரேபியாவிற்குள் நுழையலாம் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகிய  நாடுகளுக்கே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page