நாவல பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் (01.04).அன்று இரவு நுழைந்தபோது கைது செய்யப்பட்ட
நிமேஷ் என்ற 26 வயது நடனக் கலைஞர் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரது நடத்தை மாற்றம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட
சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக, வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரைகள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக, பதில் பொலிஸ் மா அதிபரினால்,பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகத்திற்கு நேற்று (06) அனுப்பப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தில் கடமைகளைப் புறக்கணித்ததற்காக ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.










Leave a Reply