யாழில் 10 போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில்,இளைஞர் ஒருவரை யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றைய தினம் (06) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனிடம்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரது வீட்டில் இருந்து மேலும் 75 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.










Leave a Reply