உள்ளூராட்சி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 70.15 வீதமானோர் வாக்களிப்பு

Spread the love
மன்னார் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. எந்தவிதமான வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (6.05) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில்இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன்போது  அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 88 உறுப்பினர்களை தெரிவு செய்ய 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் இன்று (6)மாலை வரை 64 ஆயிரத்து 904 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதனடிப்படையில் மாவட்டத்தின் முழுமையான வாக்குப்பதிவு 70.15% ஆகக்  காணப்படுகின்றது. அதற்கமைய  மன்னார் நகர  சபைக்கு 10,975 வாக்குகளும் மன்னார் பிரதேச சபைக்கு 16,939 வாக்குகளும், நானாட்டான் பிரதேச சபைக்கு 12,343 வாக்குகளும், முசலி பிரதேச சபைக்கு 10,819 வாக்குகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 13,636 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மாலை 4:30 மணி அளவில்  மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47 வாக்குகள் என்னும் நிலையங்களில் வாக்குகள் பற்றிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில்  வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து தேர்தல் வாக்குப்பதிவு விபரங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முழுமையான வாக்களிப்பு முடிவுகள் மாவட்டச் செயலகம் ஊடாக அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You cannot copy content of this page