80 லட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார், முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது,
நேற்று (04.05) ஞாயிற்றுக்கிழமை கொக்குவெளிப் பகுதியில் வைத்து 29 வயதுடைய குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்
கைதானவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










Leave a Reply