, ,

வாக்குச்சீட்டில் புள்ளடி மாத்திரமே இடவேண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

Spread the love

நாளை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர், ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு அமைய இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டில் புள்ளடி மட்டுமே இடவேண்டும் எனவும்,

அத்தோடு வாக்களிப்பு நிலையங்களில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் எனவும்

வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும். அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும்.அதில் புள்ளடி இட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம் எனவும் புள்ளடி இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் எனவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page