,

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

Spread the love

அம்பலாங்கொடை, மீட்டியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மீட்டியாகொடை, தம்பஹிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் அருகே நேற்று இரவு (03.05) 10 மணியளவில்  இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை  நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page