, ,

யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியில் விபத்து

Spread the love

மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் நேற்று (03.4) சனிக்கிழமை  காலை இடம்பெற்ற விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலையில்  கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்று  கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில்,

எதிரே அதிவேகமாக வந்த ஹென்டர் ரக வாகனம் ஒன்று  கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடனும், வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் நின்ற நபர்  காயங்களுக்கு உள்ளான நிலையில், அவரது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த விபத்தில் ஹென்டர் ரக வாகனத்தின் சாரதி, உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளதுடன்
ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page