முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 2325 பேரைக் கைது செய்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இராணுவத்தைச் சேர்ந்த 2017 பேரையும், கடற்படையயைச் சேர்ந்த 145 பேரையும், விமானப்படையைச் சேர்ந்த 163 பேரையும்,
கடந்த பெப்ரவரி 22ம் திகதி தொடக்கம் மே மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த படைப்பிரிவின் விசேட விசாரணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
பொலிசாரும் முப்படைகளில் இருந்து தப்பியோடிய 282 சிப்பாய்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளை மேற்கொண்ட பின் அவர்களைச் சட்டரீதியாக படைப்பிரிவுகளில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.










Leave a Reply