, ,

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

Spread the love

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்த மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள்,
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நிரந்தர பாதுகாப்பு பொறிமுறையொன்று அவசியமென அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமெனவும் இது தொடர்பில் கடற்படையினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில்
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இறங்குதுறை பிரச்சினைகள், நெடுந்தீவு அபிவிருத்தி, மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page