பேருந்துகள் 2 நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தயிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை மற்றும் பெலியத்த ஹத்போதிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.










Leave a Reply