,

பாணந்துறையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Spread the love

களுத்துறை மாவட்டம் பாணந்துறை, ஹிரணை பகுதியில் இடம்பெற்ற  துப்பாக்கிப் பிரயோகத்தில்  ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றின்  போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர்   குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர்  பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  சம்பவம் தொடர்பில் பொலிசாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page