எமது வீரம் விளைந்த மன்னார் இன்று எதிரிகளின் கபளீகரத்துக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது
என தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (28.04) திங்கட்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
மக்கள் சிந்தித்தால் மட்டுமே மன்னார் மண்ணைக் காப்பாற்ற முடியும் சில வருடங்களுக்கு முதல் 8 மாவட்டங்களில் நாங்கள் பெரும்பான்மையாக இருந்தோம் அதில் ஆறு மாவட்டங்களில் இன்று சிங்கள பெரும்பான்மை ஊடுருவி வந்து விட்டது. அதில் மன்னாரும் ஒன்று என்பது வேதனையான விடயம்.
இந்த மன்னாரிலே காற்றாலை வடிவிலும் கனிய மண்ணகழ்வு வடிவத்திலும் எமது மண்ணை ஆக்கிரமிப்பதற்கு எதிரிகள் கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறார்கள். இவற்றை நாங்கள் எங்கள் மண்ணிலே அனுமதிப்போம் என்றால் அந்த காற்றாலை வீச்சினால் இந்த மன்னாருடைய வளங்கள் காணாமல் போகும்.
இவற்றை நாங்கள் தடை செய்ய வேண்டும் என்றால் இந்த மண்ணையும் மண்ணாரையும் நேசிக்கின்ற பிரதிநிதிகள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே வெற்றி பெற வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மன்னாருக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமர சூரிய,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காற்றாலை மற்றும் கனிய மண்ணகழ்வை உடனடியாக நிறுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதனால் மக்கள் நம்பி வாக்களித்தார்கள்.
சமீபத்தில் மன்னாருக்கு வந்த பிரதமர் காற்றாலை பற்றியோ கணியமண்ணகழ்வு பற்றியோ மூச்சு கூட விடவில்லை.
அத்தோடு இப்போது சொல்லுகிறார்கள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தத் திட்டங்களை முன்னெடுப்போம் என்று
நாங்கள் ஜேவிபியிடம் கேட்கிறோம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேட்கிறோம்
நீங்கள் ஆட்சிக்கு வர முன்பு மன்னாரைப் பாதித்த காற்றாலை மற்றும் கனியமண்ணகழ்வு நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் எவ்வாறு பாதிப்பில்லாமல் போனது என்று.?
எனவே இதற்கு நாங்கள் முடிவு கட்ட வேண்டும் என்றால் இந்த மண்ணை நேசித்த, மக்களை நேசித்த, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் சைக்கிள் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்றார்.
குறித்த கூட்டத்தில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர், செல்வராசா கஜேந்திரன். சட்டத்தரணி ஸ்ரீகாந்தா,கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது












Leave a Reply