, , ,

பலாலி ஊடாக காங்கேசன்துறை வரையிலான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Spread the love

பலாலி ஊடாக காங்கேச்துறை வரையான அரச பேருந்து சேவைகள் இன்று (29.04) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்.

1990 காலப்பகுதிகளில் இருந்து பலாலி உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு
யாழ்ப்பாணம் பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன் பொதுப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 35 ஆண்டுகளின் பின்னர் நிபந்தனைகளுடன் குறித்த வீதி முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.

குறித்த வீதி திறப்பின் பின்னர் அரச பேருந்து சேவைகள் இன்றைய தினத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் ஊடாக தனியார் சிற்றூர்தி சேவைகளும் ஒரு சில தினங்களில் ஆரம்பிக்கப்பட வுள்ளதாக தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page