டொனால்ட் டிரம்ப்பின் அதிகரித்த வரி விதிப்பினால், வாகன இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த,இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரொட்ரிகோ
“ஜப்பானின் நாணயமான யென்னின் பெறுமதி 1.95ஆக காணப்பட்ட நிலையில் அது தற்போது 2.15 வரை அதிகரித்துள்ளது.
இதன்படி “யென்” பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு வாகன விலையில் 20 சதவீத அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும்.
இதனால் இந்த வாரம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளில் பாதிப்பு ஏற்படும். டொலர், பவுண்ட் போன்ற முக்கிய நாணயங்களின் பெறுமதியின் அதிகரிப்பு இலங்கையின் வாகன இறக்குமதியைக் கடுமையாக பாதித்துள்ள நிலையில்,
தற்போது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் அனுமதியில் தாமதங்கள் மற்றும் பிழைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.










Leave a Reply