, ,

தலைக் கவசத்துடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்களைச் சோதனை செய்ய நடவடிக்கை

Spread the love

பாதுகாப்பு தலைக்கவசத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் சோதனை செய்யப்படுவார்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருந்த காரணத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தங்களுடைய பாதுகாப்பிற்காகத் தலைக்கவசம் அணிவது கட்டாயம் எனினும்
மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்ளும் நபர்களைச் சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு பொலிஸ் தலைமையகத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page