,

விசேட தரத்திற்குப் பதவி உயர்த்தப்பட்டுள்ள கலாசார உத்தியோகத்தர்

Spread the love

கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் விசேட தரத்திற்குப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் 281/7 கண்டிவீதி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் கலாசார உத்தியோகத்தர் தரம் 1 இலிருந்து விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டு கலாசார உத்தியோகத்தராக நியமனம் பெற்ற திரு இ.நித்தியானந்தன் நெடுந்தீவு பிரதேச செயலகம், ஊர்காவற்துறை பிரதேச செயலகம், காரைநகர் பிரதேச செயலகம், வவுனியா பிரதேச செயலகம், மடு பிரதேச செயலகம் ஆகியவற்றில் கலாசார உத்தியோகத்தராகவும்,

கடந்த 2009 ஆண்டு முதல் மாவட்ட கலாசார உத்தியோகத்தராக வவுனியா மாவட்ட செயலகத்திலும்,

2018 ஆண்டு முதல் மன்னார் மாவட்ட செயலகத்திலுமாக சுமார் 16 வருடங்கள் மாவட்டக் கலாசார உத்தியோகத்தராகப் பதில் கடமையாற்றியிருந்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைமாமணிப் பட்டதாரி
யான இவர்,யாழ். பல்கலைக்கழகத்தில் பண்பாட்டியலில் முதுகலைமாணிப் பட்டத்தையும்

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தினால் வழங்கப்படும் இளஞ்சைவப் புலவர்,சைவப்புலவர் பட்டங்களையும்

யாழ்ப்பாணம் சைவ பரிபாலனசபையினரால் வழங்கப் படும் சித்தாந்த பாலபண்டிதர் , சித்தாந்த பண்டிதர் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page