, ,

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வட்டுவாகல் பாலத்தின் கட்டுமான பணிகள்-நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்

Spread the love

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமலிருந்த வட்டு வாகல் பாலத்திற்கு  2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாகப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான முன்னாயத்த களவிஜயமாக நேற்றைய தினம் (22.04) செவ்வாய்க்கிழமை,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு  குறித்த  பாலத்தினைப் பார்வையிட்டார்.

குறித்த கள விஜயத்தின்போது  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள்  கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page