இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம் பிட்டிய பிரதேசத்தின் லக்சந்த செவன எனப்படும் அடுக்குமாடிக் கட்டடத் தொகுதியில் பிரியசாத்துக்கு சொந்தமான வீட்டில் நேற்று (22.04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த டான் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(23) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சமூக செயற்பாட்டாளரான டான் பிரியசாத் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளராக செயற்பட்டவர் என்பதுடன் நவ சிங்களே என்ற சிங்கள பௌத்த இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர் ஆவார்.
<span;>.










Leave a Reply