,

கடமை நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக வலைத்தளத்தில் ஈடுபடுபவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Spread the love

கடமை நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக வலைதளங்களில்  அரச  மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என சுகாதார, மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22.04) செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பின் போது, ஒரு ஊடகவியலாளரின்  கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,

“அலுவலக  நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பல காணொளிகள் சுகாதார அமைச்சகத்திற்கு கிடைத்துள்ளது.

அதற்கமைய  இந்த வகையான நடவடிக்கைகள் கடமைச் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு முரணானதா என்பது தொடர்பில்  விசாரணைகள்  கொண்டு,  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”  என்று தெரிவித்தார்.

இதேவேளை,  கடமை நேரத்தில் டிட்டொக் போன்ற பல சமூக ஊடகங்களில் தாதியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களின் பல்வேறு காணொளிகள் வெளியிடப்படுவது சுட்டிக் காட்டத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page