,

பாடசாலை மாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன் மரணம்

Spread the love

ரிதிகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் தர  வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன்  நேற்றைய தினம் (22.04) செவ்வாய்க்கிழமை  உயிரிழந்துள்ளார்.

குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த   திலிண விராஜ் என்னும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக, குறித்த மாணவன் சென்றிருந்த வேளையில்,

அதே பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சை  எழுதிய  மாணவ குழுவினர் மற்றும்  வெளியாட்கள் குழுவினரால் தனிப்பட்ட விரோதம்  காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில்  தலைக்கவசங்களால்  தலையில் தாக்கப்பட்ட அவர் மயக்கமடைந்த நிலையில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர  சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று  உயிரிழந்துள்ளார்.

இந்த  தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட  அனைத்துச் சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குருணாகலை – வெலெகெதர பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் நேற்று(22) ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page