200,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(21.04) திங்கட்கிழமை காலை அவரது அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் முறைப்பாட்டிற்கமைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழிலதிபரின் மகன் தொடர்பான விவாகரத்து வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்குவதற்கென,காதி நீதிமன்ற நீதிபதி 200,000 ரூபாய் தொகையை இலஞ்சமாக கேட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே குறித்த கைது இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.










Leave a Reply