உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை வெகு விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்துவதோடு உண்மையான நீதியை சட்டத்துறை மூலம் பெற்றுக் கொடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று (21.04) திங்கள் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தொடர்பான நீதியை நாங்கள் பெற்றுத்தர மாட்டோம் என பலர் கூறுகின்றனர். அது அவ்வாறு அல்ல.
உண்மையான நீதியை சட்டத்துறை மூலம் பெற்றுக் கொடுப்போம்.அதற்கான அறிக்கையைப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.அதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் குற்றவாளிகள்
மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள்.
நாங்கள் கூறிய அனைத்தையும் செய்வோம் ஊடக சுகந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது.
அப்பொழுது பல தமிழ் அரசியல் வாதிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அதுவும் வெளிவரும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியலுக்காக செய்யப்பட்டது
அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக மக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தினார்கள்.
இந்த மக்களுக்கு நியாயத்தை கூற வேண்டிய தேவை இருக்கின்றது. அது வெகுவிரைவில் வெளி வரும் என அவர் மேலும் கூறியுள்ளார்.










Leave a Reply