நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தினர் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (21.04) திங்கட்கிழமை, காலை ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று எதிர்த்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்
அவர்களில் 20 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் கிரிந்திவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










Leave a Reply