, ,

மீண்டும் லஞ்ச ஊழல் ஆணை குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி

Spread the love

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் லஞ்ச ஊழல் ஆணை குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முன்னிலையாகுமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி காலை 09.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது
சில காரணங்களால் அன்றையதினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page