உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சீனாவின் 10G சேவை

Spread the love

சீனாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள10G சேவையானது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் முதல் 10G ஸ்டேண்டர்ட்(Standard) புரோட்பேண்ட்(Broadband) இணைய சேவையானது,ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யுனிகொம்(Unicom) தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்த 10G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய, இணைய சேவையில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 Mbps ஐ எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உட்படப் பல நாடுகளில் 5G சேவையே தற்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page