யாழ். வடமராட்சி கிழக்கு,உடுத்துறைப் பகுதியில் நேற்று(20.04) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், ஆழியவளையைச் சேர்ந்த நபர் ஒருவர் உடுத்துறைப் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை,அது வாக்குவாதமாக மாறிய நிலையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர், மருதங்கேணி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகப் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










Leave a Reply