நாடு முழுவதும் 3 தேவாலயங்கள் உட்பட கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள் என்பவற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
அந்த வகையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, காலை 7 மணிக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் இருந்து பிரார்த்தனை ஊர்வலம் ஆரம்பமாகி,கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பேராயர்,கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட நிகழ்ச்சிகள் காலை 8:30 க்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறும்.மேலும் காலை 8:45க்கு,அனைத்து மத ஸ்தலங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு இறந்தவர்களை நினைவு கூர்ந்து2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்










Leave a Reply