அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த நிலையில் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதாலேயே வெடித்து சிதறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில்,விமானத்தில் பயணித்த இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த,விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பெடரல் ஏவியேஷன் நிர்வாகம், மற்றும் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply