யாழ் பருத்தித் துறையில் பெண் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பருத்தித்துறையில் தனது சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி என்ற 69 வயது மூதாட்டியை இவ்வாறு கொலையாகியுள்ளார்.

வீட்டிற்குள் திருடுவதற்காக சென்ற அயல் வீட்டு இளைஞர் குறித்த கொலையைச் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் குறித்த வீட்டில் இரண்டு வயோதிப சகோதரிகள் தனியாக வசித்து வந்துள்ளனர் அவர்களில் ஒருவர் இன்று காலை உயர்த்த ஞாயிறு வழிபாட்டிற்காகத் தேவாலயம் சென்றுள்ள நிலையில் குறித்த கொலை செய்யப்பட்ட பெண் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு சகோதரிகளும் வெளியே சென்றுள்ளதாக நினைத்து அயல் வீட்டு இளைஞர் திருடுவதற்காக உள்ளே சென்று இருக்கிறார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த பெண் அவரைக் கண்டதன் நிமித்தம் குறித்த இளைஞர் அவரை பொல்லால் தலையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய மற்றைய பெண் தனது சகோதரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அயலவர்களை அழைத்துள்ளார்.
அயலவர்கள் வந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் நிமித்தம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அயல் வீட்டு இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகள் பருத்தித் துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.










Leave a Reply