மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (19.04) மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சந்திவெளியைச் சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனத் தெரியவந்துள்ளது.
சந்திவெளியில் நேற்று நடைபெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக உணவினை வாங்கி வரச் சென்ற போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு 9 நாட்களுக்கு முன்னர் திருமணமாகியிருந்த நிலையில் இவ்வாறு விபத்தில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.










Leave a Reply