ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது இன்று (19.04) சனிக்கிழமை நண்பகல் 12.17 மணியளவில் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாகவும், பூமிக்கு 130 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் சில குலுங்கியுள்ள நிலையில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.










Leave a Reply