,

பிள்ளையானிடமிருந்து வெளிவந்துள்ள பல ரகசியங்கள்

Spread the love

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களால் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிள்ளையானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு  இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடனும் அவருக்குத் தொடர்பு இருப்பது ஓரளவு தெரியவந்துள்ளது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்,
குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்கு, கடந்த  அரசாங்கங்களின் காலத்தில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன

அதனடிப்படையில்  முன்னாள் ஜனாதிபதி மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பிள்ளையானைச் சந்திப்பதற்கு  முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில்

பிள்ளையானின் சட்டத்தரணி என்று கூறி கம்மன்பில பிள்ளையானைச் சந்தித்துள்ளார்.தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை சம்பவம் தொடர்பாக  கைது செய்யப்பட்டிருப்பினும் விசாரணைகளில் அவரிடம் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page