நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று(19.04) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக ஏப்ரல் 27ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டு விநியோகங்கள் நிறைவடையும் என்று தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டு விநியோகம் ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேசமயம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் நேற்று (18) வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply