கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19.04) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 25, 48 மற்றும் 50 வயதுடைய கொழும்பு, மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்த 5.248 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை கைப்பற்றிய பொலிஸார்,
கைது செய்யப்பட்ட பெண்களையும் அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருளையும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.










Leave a Reply