தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு

Spread the love

நேற்றிரவு(18.04)வெள்ளி,கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேக நபர்,துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்திய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த தேவாலயத்தின் பங்குத்தந்தையுடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனினும், தேவாலயத்தின் மீது சன்னங்கள் பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளையதினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page