,

எம்மை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் -அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Spread the love

எம்மை நம்பி வாக்களித்த தமிழர்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு மற்றும் நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தி கட்சியை நம்பி வாக்களித்துள்ளார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எங்களுக்கு அமோக வாக்களித்து வெற்றி பெறச் செய்ததைப் போன்று நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் எமக்குப் பேராதரவினை வழங்குவார்கள்.

நாட்டில் இனவாதம், மதவாதம் இல்லாத ஒரே ஒரு கட்சி என்றால் அது தேசிய மக்கள் சக்தி கட்சி தான். அதனால்தான் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவு வழங்குகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம் இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போன்று தமிழ் முஸ்லிம் மக்களும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எமது விருப்பமாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page