வவுனியாவில் , இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (16.04)) மாலை குறித்த இளைஞனின் சடலம் இரத்தக் கறைக் காயங்களுடன் மீட்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த இளைஞன் புதுவருட தினத்தன்று (14.04) காலை வீட்டில் இருந்து சென்றதாகவும்
அதன் பின் காலையில் சூடுவெந்தபுலவு வீதியில் நின்றதாகவும், தன்னை சிலர் தாக்குவதாகவும், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு தன்னை பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடும் படியும், தமது கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரரிடம் கேட்டபோது, வீதியால் மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞனை பொலிஸ் நிலையத்தில் இறக்கி விட்டதாகவும்
அவர் பொலிஸ் நிலையத்திற்குள் சென்றதாகவும் அதன் பின்னரே இரண்டு நாட்களுக்கு பிறகு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள உறவினர்கள்
கொலைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.










Leave a Reply