உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானுடன் பணியாற்றிய நபர் ஒருவரே இவ்வாறு தானாகவே முன்வந்து குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் விரைவாகவும், புதிய கோணத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக ஒரு குழுவினர் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு வருடங்கள் ஆகின்றன. அது குறித்து பல விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் புதிய கோணத்தில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.
இதன்படி, பிள்ளையானுடன் உடன் பணி புரிந்ததாகக் கூறப்படும் ஒருவர் இன்று சரணடைய வருகின்றார். இவர் பிள்ளையானுக்கு மிக அருகில் இருந்த ஒருவராகும். இவரது வாக்குமூலத்தின் மூலம் பல தகவல்கள் வெளியாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










Leave a Reply