அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வலுக்கும் வர்த்தகப் போர்

Spread the love

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தொடரும் வர்த்தக போரினால். இருநாட்டு மக்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

சீனாவின் இணையத்தள விற்பனை நிறுவனங்களான ஷீன் (Shein) மற்றும் தெமு (Temu) ஆகிய நிறுவனங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,

இந்த விலை அதிகரிப்பானது அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு 245 சதவீத வரியினை டிரம்ப் விதித்துள்ளமையால்,
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீன இணையத்தள விற்பனை நிறுவனங்களால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தக போர் வலுக்கும் நிலையில், சீனாவின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா என்ன பதிலடி கொடுக்கும் என்பது குறித்து பலரும் எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்களால் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page