, ,

இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நரேந்திர மோடியுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Spread the love

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் வருகை குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று(17.04) வியாழன் காலை நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் இந்த கலந்துரையாடல்களின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கையின் கடல் வளங்கள், இலங்கை மக்களுக்கு சொந்தமானவை, எனவே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதன் நிமித்தம் கடற்பகுதியில் நடைபெறும் சகல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இலங்கைக் கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பேசாலை பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி நடவடிக்கைகள் குறித்து அவர் கவலை வெளியிட்ட அவர், சட்டவிரோத படகுகள் கடல் வளங்களை சூறையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page