அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றிலிருந்து ஆணிண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலமானது இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு காணப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகையலங்காரக் கடையொன்றிலிருந்து நேற்று (15)செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வாடகை இடத்தில் சிகை அலங்கார கடை நடத்தி வந்த 51 வயதான மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த நபர் வேலையின் நிமித்தம் சிகையலங்காரக் கடையிலேயே தங்கியிருந்துள்ள நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரியவந்துள்ளமையால் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்த விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










Leave a Reply