டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவினால் இலங்கை கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,
கடந்தகால யுத்தங்கள், கோவிட் தொற்று நோய் போன்ற பல்வேறு காரணிகளால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தது. இலங்கையின் பொருளாதாரமானது மிகவும் சிறியது. அந்நிய செலாவணி கையிருப்பும் மிகக் குறைவானதே. இவற்றுள் மீளச் செலுத்த வேண்டிய தொகையும் உள்ளது. இவ்வாறான நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தற்போது விதித்துள்ள வரி விகிதம் இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பாரிய அடியாகும். அதிலும் ஆடைத் துறை பாரிய பாதிப்பை சந்திக்கவுள்ளது. பலர் வேலையிழக்கும் அபாயம் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.










Leave a Reply