23 கோடி ரூபாய் போதைப் பொருளுடன் அமெரிக்கப் பிரஜை கைது

Spread the love

அமெரிக்க பிரஜையொருவர் 23 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (15.04)கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து வர்த்தகர்களுக்கான பகுதியூடாக வௌியேற முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணப் பையில் 23 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை மறைத்துவைத்து கொண்டு வந்த 31 வயதுடைய குறித்த சந்தேக நபர், அமெரிக்காவில் காணி விற்பனை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page