2023ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் அதிகளவான இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.8 சதவீதம் அதிகமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.










Leave a Reply