தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காகப் போலிக் கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த முக்கிய சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூசா சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற கண்காணிப்பாளரை சமீபத்தில் அவரது வீட்டின் முனனால் சுட்டுக் கொன்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான விஜேமுனி லலந்த பிரிதிராஜ் குமார என்னும் குறித்த சந்தேக நபர்
ஏகநாயக்க முதியன்சலாகே லகிந்து சந்தீப் பண்டார என்ற போலி பெயரில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி,
இன்று காலை 07.50 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-404 மூலம் நாட்டை விட்டு தப்பிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர், தெற்குப் பகுதியில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கரந்தெனிய சுத்தாவின் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்படுவதாகப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.










Leave a Reply