நாட்டு மக்களுக்கு மின்சார சபையின் அவசர அறிவிப்பு

Spread the love

நாட்டிலுள்ள அனைத்து “கூரை சூரிய மின்சக்தி” படலங்களின் உரிமையாளர்களுக்கும் மின்சார சபை அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் போது, வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.

அவ்வாறு குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிற்பகல் 3 மணி வரையில் சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.    

அத்துடன் கடந்த 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page