தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றைத் தருமாறு தனது பாதுகாப்பு அதிகாரியூடாக,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணிலின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேகநபருடன் தொலைபேசியில் பேசுவது சட்டவிரோதமானது என்ற காரணத்தினால் அந்த கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.










Leave a Reply