,

புத்தாண்டு நிகழ்வுகள் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

Spread the love

கடந்த வருடங்களைப் போல  இந்த வருடம் ஜனாதிபதியின் புத்தாண்டு கொண்டாட்ட  நிகழ்வுகளைத்  தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டாமென  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,.நான்  எவ்வாறு புத்தாண்டு கொண்டாடுகிறேன் என்பதனை படம் போட்டு காண்பிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை.
தொலைகாட்சி நிறுவனங்களை அழைத்து வந்து, அதனை நேரடியாக ஒளிபரப்பி பொது மக்களின் பணத்தை வீணடித்து, நான் பால் பொங்க வைப்பதனையும், பாற்சோறு சாப்பிடுவதனையும் மற்றவர்களுடன் மகிழ்ச்சியடைவதனையும் தொலைகாட்சியில் காண்பிப்பதில் எந்த பயனும் இல்லை.
சாதாரண மக்கள் போன்று தான் எனது கொண்டாட்டமும்  இருக்கும். எனவே இந்த ஆண்டு ஜனாதிபதியின்  புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் நேடி ஒளிபரப்புகளிலோ  அல்லது காணொளிகளிலோ பார்க்க முடியாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page